Monday, August 31, 2015

You are not your body

You are what you think of.
Think for a second.
you aren't your body.Body is just the carrier of your soul.
Your soul is full of energy and it possess infinite potential.
Your inner mind has this tremendous ability to get anything you want.
Focus on your goals and go and win.
You deserve the best,yes the very best.
Whatever tou want is already there in Universe in abundance.
All you have to do is believe that you can.
Stop all the negative thoughts and trust that you can win this race.

Photo and thought by Shameela Yoosuf Ali

Wish you all a splendid day ahead.

Shameela Yoosuf Ali

காலங்களுக்கு அப்பால்… Beyond the Bygone



- A Gold winning poem AllPoetry

By Shameela Yoosuf Ali


நெறிக்கப்பட்ட சிந்தனைகளும் கசங்கிய கனவுகளும்
முடிவுறா ஒளி கொண்ட என் ஆன்மா சபிக்கப்பட்டிருக்கிறது.
வழமையான மூலைகளில் என்னைக் கட்டி விடாதீர்கள்…
நான் இரவின் நட்சத்திர ஓடைகளில் கிடக்கும் போது.

வானத்தின் வளைவில் தாரகைகள் சுவாசிக்கும் போது
அடரிருளில் நான் என் தேடலின் செடியை நடுகின்றேன்…

தங்கமும் வெள்ளியும் கொண்டமையினும்
கைவிலங்குகள் இன்னும் என் கனவுகளின் முற்றுப்புள்ளியே.
கடும்பச்சை நிறத்தில் கரையிலா சமுத்திரம்
காலங்கள் தாண்டி விரிகிறது.

நான் எவருக்காகவும் காத்திருக்கவில்லை..
என் இலட்சியம் நோக்கி நடந்திட

சமீலா யூசுப் அலி

வா ஒரு வானம் எழுதுவோம்



பூட்டிய விலங்குகளுக்குள்ளால்
முளைக்கும் சிறகுகள் நாம்.

நமது பாதங்களின் கீழ் பூமியில்லை
ஓரு துண்டு வானம்
துளிர்க்கும் ஆப்பிள் செடி கூட
நமக்கு சொந்தமில்லை…
பிஞ்சுக் குழந்தைகளின் கழுத்துக்குள்
அந்த ரத்தக்காட்டேறியின் பற்கள்…

அடரிருள் நிலவில் எழுதிய கவிதையாய்
மஸ்ஜிதுல் அக்ஸா
தொழுகை வரலாற்றின் முதல் கிப்லா
முற்கம்பிகளும் துப்பாக்கிகளும் இல்லாததோர்
நீள் இரவொன்று வரும்
நெற்றிகள் சுஜூதில் வேர்பிடித்துக்கிடக்க



நமக்கானதோர் செவ்வூதா வானத்தைஇளமஞ்சள் சூரியனைஒலிவ் மரக்காடுகளைஒலித்தோடும் ஓடைகளைவாருங்கள் நாமே வர்ணங்குழைத்து எழுதுவோம்…


இஸ்ரேலே….
அழுக்குப்பிடித்த என் ஆடைக்குள்
ஒளிந்திருக்கும் நம்பிக்கை….
வெளுத்துத்துவைத்த உன் ஆடைக்குள்ளிருக்கும்





அழுக்குப்பிடித்த பயத்தை பற்றி அறிந்தேயிருக்கிறது.


சிறுகல் பொத்திய உள்ளங்கை
நெஞ்சு கொள்ளா கனவுகள்
இதோவோர் அக்கினிக்குஞ்சு புறப்பட்டு விட்டது!!!


@Shameela Yoosuf Ali

2012.11.20