பூட்டிய விலங்குகளுக்குள்ளால்
முளைக்கும் சிறகுகள் நாம்.
நமது பாதங்களின் கீழ் பூமியில்லை
ஓரு துண்டு வானம்
துளிர்க்கும் ஆப்பிள் செடி கூட
நமக்கு சொந்தமில்லை…
பிஞ்சுக் குழந்தைகளின் கழுத்துக்குள்
அந்த ரத்தக்காட்டேறியின் பற்கள்…
அடரிருள் நிலவில் எழுதிய கவிதையாய்
மஸ்ஜிதுல் அக்ஸா
தொழுகை வரலாற்றின் முதல் கிப்லா
முற்கம்பிகளும் துப்பாக்கிகளும் இல்லாததோர்
நீள் இரவொன்று வரும்
நெற்றிகள் சுஜூதில் வேர்பிடித்துக்கிடக்க
நமக்கானதோர் செவ்வூதா வானத்தைஇளமஞ்சள் சூரியனைஒலிவ் மரக்காடுகளைஒலித்தோடும் ஓடைகளைவாருங்கள் நாமே வர்ணங்குழைத்து எழுதுவோம்…
இஸ்ரேலே….
அழுக்குப்பிடித்த என் ஆடைக்குள்
ஒளிந்திருக்கும் நம்பிக்கை….
வெளுத்துத்துவைத்த உன் ஆடைக்குள்ளிருக்கும்

அழுக்குப்பிடித்த பயத்தை பற்றி அறிந்தேயிருக்கிறது.
சிறுகல் பொத்திய உள்ளங்கை
நெஞ்சு கொள்ளா கனவுகள்
இதோவோர் அக்கினிக்குஞ்சு புறப்பட்டு விட்டது!!!
@Shameela Yoosuf Ali
2012.11.20
No comments:
Post a Comment